கழுகுமலை அருகே வீடு புகுந்து 4 பவுன் நகைகள் திருட்டு
கழுகுமலை அருகே வீடு புகுந்து 4 பவுன் நகைகள் திருட்டு
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் சின்ன காலனி தெற்குத் தெருவில் வசித்து வருபவர் கருப்பசாமி மகன் சாலமன்(வயது 45). கழுகுமலையில் பேட்டரி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டி விட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்றார். மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் அரை பவுன் மோதிரம், அரைப் பவுன் கம்மல் ஆகியவை திருடு போயிருந்தது. யாரோ மர்மநபர் நோட்டமிட்டு வீடு புகுந்து நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story