மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி தேர்வு


மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி தேர்வு
x
தினத்தந்தி 12 Feb 2021 4:42 PM GMT (Updated: 12 Feb 2021 4:42 PM GMT)

மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது

உசிலம்பட்டி, 
உசிலம்பட்டி அருகே உள்ளது சின்னக்கட்டளையில் வருகிற 17-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அந்த கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு நேற்று அந்த ஊரில் நடைபெற்றது. 
இதில் வருவாய்த்துறை சார்பில் மண்டல துணை வட்டாட்சியர் வீரமுருகன், வருவாய் ஆய்வாளர் பாண்டித்துரை ஆகியோர் தலைமையிலும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு மாடுபிடி வீரர்களின் ஆவணங்களை சரிபார்த்தனர். அதன் பின்னர் மாடுபிடி வீரர்களை பதிவு செய்தனர். 
இதைதொடர்ந்து மாடுபிடி வீரர்களுக்கு உடற்தகுதி பரிசோதனையை வட்டார மருத்துவ அலுவலர் விசுவநாதபிரபு தலைமையில் மருத்துவ பணியாளர்கள் செய்தனர். இதில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பதிவு செய்யப்பட்டது. இவர்களுக்கு இன்று கொராேனா பரிசோதனை நடைபெற உள்ளது.

Next Story