தேசிய குடல் புழு நீக்க தினம்
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் தேசிய குடல் புழு நீக்க தினம் கொண்டாடப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இந்திய குழந்தைகள் மருத்துவ கழக தமிழ்நாடு கிளை சார்பில் தேசிய குடல்புழு நீக்குதல் தினம் கொண்டாடப்பட்டது. 6 மாதத்திற்கு ஒரு முறை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரை கொடுக்கப்பட வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் 6 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் இந்திய குழந்தைகள் மருத்துவ கழக செயற்குழு உறுப்பினர் டாக்டர் அப்துல் அஜீஸ், தென்காசி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், குழந்தைகள் டாக்டர்கள், கீதா, பாபு, அன்ன பேபி, ராஜ்குமார், மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story