காயமடைந்தவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும்


காயமடைந்தவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும்
x
தினத்தந்தி 12 Feb 2021 8:38 PM GMT (Updated: 12 Feb 2021 8:38 PM GMT)

வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என நடிகை கவுதமி கூறினார்.

சிவகாசி, -
வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என நடிகை கவுதமி கூறினார். 
ஆறுதல் 
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்தவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தனர். இவர்களுக்கு தலைமை டாக்டர் அய்யனார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். 
சிகிச்சையில் இருந்தவர்களை சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், பா.ஜனதாகட்சியை சேர்ந்த நடிகை கவுதமி, மாநில நிர்வாகி பார்த்தசாரதி, மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சி மத்திய மாவட்ட தலைவர் டேனியல் மற்றும் அரசியல் பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
ஆபத்தான நிலை 
அப்போது நடிகை கவுதமி நிருபர்களிடம் கூறியதாவது:-
நடந்த இந்த கொடூரமான விபத்துக்கு எந்த வார்த்தையில் ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருபவர்களுக்கு இங்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். உயிரை பணயம் வைத்து இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பிரதமர் ஆறுதல் 
இந்த அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் வசதிகள் வேண்டும் என்று எண்ணுகிறேன். இது குறித்து மத்திய, மாநில அரசுக்கு அறிக்கையாக கொடுக்க இருக்கிறேன்.  இந்த விபத்து  குறித்து தகவல் கிடைத்தவுடன் பிரதமர் மோடி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி உள்ளார். இந்த மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை அவரின் கவனத்துக்கு கொண்டு சென்று தேவைகளை நிறைவேற்றப்படும். இனி வரும் காலங்களில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டும். கட்சி சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்வது என மாநில தலைமை அறிவிக்கும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story