கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற கோரி தஞ்சையில் கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்:
கட்டுமான பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற கோரி தஞ்சையில் கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
தஞ்சை ரெயிலடியில் அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் தஞ்சை மையம் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைவர் மேகன் தலைமை தாங்கினார். செயலாளர் ரெங்கப்பா, பொருளாளர் குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், இரும்பு கம்பி, மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் முந்தைய விலையை காட்டிலும் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. பொதுமக்களும், கட்டிட ஒப்பந்ததாரர்களும் இந்த விலையேற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விலை உயர்வு
அரசு கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் முன்னாள் தலைவர்கள் அய்யப்பன், குமார், கல்யாணசுந்தரம், இளஞ்சேரன், சோமசுந்தர பாரதி, ஆல்பர்ட்சுரேஷ், ரவிச்சந்திரன், பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story