வியாபாரிகள் சங்கத் தலைவர் மீது தாக்குதல்: வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
வியாபாரிகள் சங்கத் தலைவரை தாக்கிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திரு.வி.க.நகர்,
சென்னை திரு.வி.க.நகர் அடுத்த குமரன் நகர், ரமணி பாய் காலனியில் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த முகமது ஆலம் (வயது 34) என்பவர் துரித உணவு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த கடைக்கு அதே பகுதியை சேர்ந்த பிரபா (28) மற்றும் அவரது நண்பர் கண்ணன் (31) ஆகியோர் சாப்பிட வந்தனர்.
அப்போது, ஏற்பட்ட தகராறில் கடையில் வேலை செய்த அப்துல் என்பவரை பிரபாவும், கண்ணனும் தாக்கினர். இதுகுறித்து அங்கிருந்த கொளத்தூர் பகுதி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயராமன் (56) என்பவர் வந்து தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பிரபாவும் கண்ணனும் அவரையும் கட்டையால் பலமாக தாக்கினார்.
இதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள் காயமடைந்த ஜெயராமனை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் கண்ணனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள பிரபாவை திரு.வி.க. நகர் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story