காதலனை போராடி கரம் பிடித்த இளம்பெண்


காதலனை போராடி கரம் பிடித்த இளம்பெண்
x
தினத்தந்தி 13 Feb 2021 5:36 PM GMT (Updated: 13 Feb 2021 5:36 PM GMT)

கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை இளம்பெண் போராடி கரம் பிடித்தாா்.

திண்டிவனம், 

திண்டிவனம் அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் ராஜேஸ்வரி(வயது 20). இவரும், செங்கல்பட்டு பகுதியில் தனியார் கம்பெனியில் பணிபுரியும் விக்னேஷ்(25) என்பவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி ராஜேஸ்வரியிடம் அவர் உல்லாசம் அனுபவித்து உள்ளார். இதனால் ராஜேஸ்வரி கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, கர்ப்பம் வெளியே தெரிவதற்குள் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் விக்னேஷ் மறுத்துவிட்டார். இது குறித்து ராஜேஸ்வரி திண்டிவனம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் லதா, இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விக்னேஷ், ராஜேஸ்வரியை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். பின்னர் இருவரும் போலீஸ் நிலையம் அருகில் உள்ள அம்மன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 

Next Story