21 300 பேருக்கு 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி


அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்புக்கான 2-வது டோஸ் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்
x
அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்புக்கான 2-வது டோஸ் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்
தினத்தந்தி 14 Feb 2021 12:03 AM IST (Updated: 14 Feb 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் 21300 பேருக்கு 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது

கோவை ,

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடும் பணிகள் கடந்த மாதம் 16 ந்தேதி  தொடங்கியது.  டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் என முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கோவை அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, அரிசிபாளையம் மருத்துவமனை, சீதாலட்சுமி நகர்புற சுகாதார நிலையம், துடியலூர், எஸ்.எஸ்.குளம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 21 இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடக்கிறது. இதில், நேற்று வரை 21 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 

மேலும், முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்கள் 28 நாட்களுக்கு பின் 2-வது டோஸ் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற முகாமில் டீன் காளிதாஸ், குழந்தைகள் சிகிச்சை துறை தலைவர் டாக்டர் பூமா உள்பட பலரும் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

சுகாதாரத்துறை அதிகாரி ரமேஷ்குமார் கூறும்போது, மருத்துவர்கள், சுகாதாரத்துறை, வருவாய்துறை உள்ளிட்ட 21 ஆயிரத்து 300 பேருக்கு முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்டது.  தற்போது இவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. மற்றவர்களும் தடுப்பூசி போட முன்வரவேண்டும் என்று கூறினார்.

Next Story