சென்னை விமான நிலையத்தில் ஆமதாபாத் விமானம் 5 மணிநேரம் தாமதம் பயணிகள் வாக்குவாதம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆமதாபாத்துக்கு சென்ற விமானம் 5 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 6.05 மணிக்கு ஆமதாபாத்துக்கு விமானம் செல்ல வேண்டும். அதில் 82 பயணிகள் பயணம் செய்ய இருந்தனா். அவர்களில் சிலர் காலை 5 மணிக்கே விமான நிலையம் வந்தனர்.
அப்போது கவுண்ட்டரில் பயணிகளுக்கு போா்டிங் பாஸ் வாங்க சென்றபோது விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று ஊழியர்கள் தெரிவித்தனா். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிறுவன கவுண்ட்டரை சூழ்ந்து கொண்டு அங்கிருந்த ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
5 மணிநேரம் தாமதம்
ஆமதாபாத் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என ஏற்கனவே அனைத்து பயணிகளுக்கும் செல்போனில் குறுந்தகவல் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஆனால் ஏஜென்சி மூலமாக டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தகவல் வரவில்லை எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து ஆமதாபாத் விமானம் 5 மணிநேரம் தாமதமாக சென்னையில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் ஆமதாபாத் செல்ல அதிகாலையில் வந்த பயணிகள், விமான நிலையத்தில் பரிதவித்தனர்.
Related Tags :
Next Story






