குளித்தலையில் வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்


குளித்தலையில் வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2021 6:09 PM GMT (Updated: 2021-02-16T23:39:36+05:30)

வங்கியின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

குளித்தலை
நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சாரதாம்பாள் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். அவருடைய வங்கி கணக்கில் இருந்து காப்பீட்டு தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் இறந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், சாரதாம்பாள் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரியும் சம்பந்தப்பட்ட வங்கியின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் கண்ணியம்மாள் தலைமை தாங்கினார். இதில், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை தாசில்தார் முரளிதரன் சம்பவ இடத்திற்கு வந்து வங்கி மேலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக 20 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக வங்கி மேலாளர் தெரிவித்ததன்பேரில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story