மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
x

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மதுரை,பிப்.
மதுரை அழகர்கோவில் மெயின் ரோடு லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது 62). இவர் சர்வேயர் காலனி 120 அடி மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story