வாழப்பாடியில் விபத்தில் வாலிபர் பலி


வாழப்பாடியில் விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 16 Feb 2021 10:37 PM GMT (Updated: 2021-02-17T04:15:06+05:30)

வாழப்பாடியில் விபத்தில் வாலிபர் பலி.

வாழப்பாடி,

பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள கல்லேரிப்பட்டி காரைக்களம் பகுதியை சேர்ந்தவர் சந்துரு (வயது 22). இவர் மும்பையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். தனது உறவினரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த சந்துரு, நேற்று முன்தினம் நள்ளிரவு வாழப்பாடியில் இருந்து கல்லேரிப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வாழப்பாடி கொட்டவாடி பிரிவு சாலையில் தனியார் மர அறுப்பு ஆலை அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக சாலையோர இரும்பு தடுப்பு வேலியில் ேமாட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story