விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2021 5:58 AM GMT (Updated: 2021-02-17T11:28:54+05:30)

நில உரிமையாளர் மற்றும் விவசாயிகளை தரக்குறைவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குன்றத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பூந்தமல்லி, 

குன்றத்தூரை அடுத்த நத்தம் பகுதியில் 64 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் செய்து கொண்டிருந்தனர். தற்போது அந்த விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பிரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காமல் மோசடி செய்ததாகவும், நில உரிமையாளர் மற்றும் விவசாயிகளை தரக்குறைவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குன்றத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்திருந்தனர். பந்தல் போட அனுமதி அளிக்காததால் கொளுத்தும் வெயிலில் குடை பிடித்த படி திருமாவளவன் எம்.பி. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story