இந்தியில் திட்டியதால் ஆத்திரம்: நண்பரை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது


இந்தியில் திட்டியதால் ஆத்திரம்: நண்பரை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2021 11:35 AM IST (Updated: 17 Feb 2021 11:35 AM IST)
t-max-icont-min-icon

மது அருந்தும் போது ஏற்பட்ட வாய்த்தகராறில் இந்தியில் திட்டியதால் ஆத்திரமடைந்த வாலிபர் நண்பரை கல்லால் அடித்து கொலை செய்தார்.

திரு.வி.க. நகர், 

சென்னை அம்பத்தூர் ரெயில்வே நிலையம் அருகே திருவள்ளூர் நகரில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் கிடப்பதாக நேற்று காலை அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சையத் முபாரக் மற்றும் விஜயகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் ஜாபர் பாஷா (வயது 31) என்பதும், அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

கல்லால் தாக்கி கொலை

இந்த நிலையில், சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் கார்த்திக் (26) என்பவருடன் ஜாபர் மது அருந்திய போது, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதில், கார்த்திக்கை புரியாதபடி இந்தியில் திட்டியதாக தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கார்த்திக், அருகில் கிடந்த கல்லால் ஜாபர் பாட்ஷாவின் தலையில் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. போலீசார் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1 More update

Next Story