பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது


பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
x
தினத்தந்தி 17 Feb 2021 5:05 PM GMT (Updated: 2021-02-17T22:35:56+05:30)

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த ஆண்டு லட்சக்கணக்கில் லிட்டில்சென்ட் பறவைகள் குவிந்ததாக கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்தனர்.

வேதாரண்யம்;
கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த ஆண்டு லட்சக்கணக்கில் லிட்டில்சென்ட் பறவைகள் குவிந்ததாக கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்தனர்.
பருவமழை
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க அங்கிருந்து   247 வகையான பறவைகள் கோடியக்கரைக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு கோடியக்கரையில் பருவமழை அதிக அளவு பெய்து மழை நீர் தேங்கி உள்ளதால் வெளிநாடுகளில் இருந்து பூநாரை, கூழக்கிடாய், உள்ளான், லிட்டில்சென்ட் உள்ளிட்ட பறவைகள் அதிக அளவில் கோடியக்கரை சரணாலயத்துக்கு வந்து உள்ளன. 
லிட்டில்சென்ட் 
கோடியக்கரை சரணாலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்றும், நாளையும் நடைபெறும் கணக்கெடுப்பு பணியில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பறவை ஆர்வலர்கள், வனத்துறையினர் என 70-க்கும் மேற்பட்டோர் 12 குழுக்களாக பிரிந்து 12 வழித்தடத்தில்பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்யாவிலிருந்து லிட்டில்சென்ட் என்ற சிறிய வகை பறவை இந்த ஆண்டு லட்சக்கணக்கில் கோடியக்கரை சரணாலயத்துக்கு வந்து உள்ளதாக பறவைகள் கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்தனர். 

Next Story