டாஸ்மாக் கடை ஊழியர் வீட்டில் திருட்டு


டாஸ்மாக் கடை ஊழியர் வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 17 Feb 2021 7:03 PM GMT (Updated: 2021-02-18T00:33:27+05:30)

டாஸ்மாக் கடை ஊழியர் வீட்டில் திருட்டு

காரைக்குடி
பள்ளத்தூர் உதயம் நகரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது 47). இவர் செங்கரையில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுஜாதா அரிமளத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இருவரும் காலை 9 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். இரவு 7 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீடெங்கும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டிலிருந்த ரூ 8.ஆயிரம் மதிப்பிலான லேப் டாப்பை காணவில்லை. ஆனால் வீட்டில் இருந்த நகைகள், பணம் திருட்டு போகவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூட்டை உடைத்து வீடடுக்குள் புகுந்து திருடிய நபரை தேடி வருகின்றனர்.

Next Story