சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 12 பேர் பாதிப்பு


சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 12 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2021 12:21 AM GMT (Updated: 18 Feb 2021 12:23 AM GMT)

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 12 பேர் பாதிப்பு.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 11 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 பேர், சேலம் ஒன்றியம், சங்ககிரி ஆகிய பகுதிகளில் தலா 2 பேரும், ஓமலூர், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். மேலும் சென்னையில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 611 ஆக உயர்ந்தது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து விட்டதால் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

Next Story