மேட்டூர் பாலமலை வனப்பகுதியில் திடீர் தீ


மேட்டூர் பாலமலை வனப்பகுதியில் திடீர் தீ
x
தினத்தந்தி 18 Feb 2021 1:41 AM GMT (Updated: 2021-02-18T07:16:20+05:30)

மேட்டூர் பாலமலை வனப்பகுதியில் திடீர் தீ.

மேட்டூர்,

மேட்டூர் பொன்னகர் அருகே உள்ள பாலமலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த தீ மளமளவென வனப்பகுதியில் பரவியது. இதனை அறிந்த பொதுமக்கள் மேட்டூர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராஜ் மற்றும் மேட்டூர் வனச்சரகர் பிரகாஷ் தலைமையில் வந்த இரு குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர.் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு இந்த தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தினால் சுமார்  2 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி எரிந்து நாசமாகியது.

Next Story