காஞ்சீபுரத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
காஞ்சீபுரம் மூங்கில்மண்டபம் பகுதியில் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் காஞ்சீபுரம் வரதராஜபுரம், வி.என்.பெருமாள் தெருவை சேர்ந்த சசிகுமார் (40) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் பூட்டை உடைத்து ரூ.500 திருடியதை ஒப்புக்கொண்டார். காந்தி ரோட்டில் உள்ள முத்தீஸ்வரர் கோவிலின் கோவில் அலுவலக அறை பூட்டை உடைத்து ரூ.500 திருடியதை ஒப்புக்கொண்டார்.
தொடர் திருட்டில் ஈடுபட்ட சசிகுமாரை போலீசார் கைது செய்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story