ஜோலார்பேட்டை அருகே தாய், மகள் மீது மயக்க மருந்து தெளித்துநகை, பணம் கொள்ளை.


ஜோலார்பேட்டை அருகே தாய், மகள் மீது மயக்க மருந்து தெளித்துநகை, பணம் கொள்ளை.
x
தினத்தந்தி 22 Feb 2021 6:06 PM IST (Updated: 22 Feb 2021 6:06 PM IST)
t-max-icont-min-icon

தாய், மகள் மீது மயக்க மருந்து தெளித்துநகை, பணம் கொள்ளை.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி ஈஸ்வரன் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 34). வியாபாரியான இவர் தள்ளுவண்டியில் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். அவர் நேற்று இரவு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில் தக்காளி கொள்முதல் செய்து வர சென்று விட்டாா்.

நள்ளிரவு 2 மணியளவில் ரவியின் மனைவி மகேஸ்வரி (32), மகள் நதியா (15) ஆகியோர் வீட்டின் ஒரு அறையில் படுத்துத் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்மநபர்கள் வந்து, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து, அறையில் படுத்துத்தூங்கிய தாய், மகள் மீது மயக்க மருந்தைத் தெளித்துள்ளனர். 

அதில் தாய், மகளும் சுய நிைனவை இழந்து மயக்க நிலையிலேேய அயர்ந்து தூங்கினர். உடேன மர்மநபர்கள் கதவை கடப்பாரையால் உடைத்து, உள்ளே புகுந்து பீரோ சாவியை எடுத்துத் திறந்து, அதிலிருந்த 4 பவுன் நகை, ரூ.75 ஆயிரத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். 

பின்னர் மயக்கமும், தூக்கமும் தெளிந்ததும் திடுக்கிட்டு எழுந்த மகேஸ்வரி, வீட்டின் கதவு மற்றும் பீரோ திறந்திருந்ததையும், பொருட்கள் சிதறி கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், ஜோலார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தாா். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

Next Story