சோழிங்கநல்லூர் தொகுதி தி.மு.க.எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சோழிங்கநல்லூர்,
சோழிங்கநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், இவர் கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திலும் தன்னுடைய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.
சட்டசபையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்படி சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று காலை அரவிந்த் ரமேசுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
அப்போது எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு குரோம்பேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் கலந்து கொண்டார். இதனால் திருமணத்தில் பங்கேற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள கொரோனா சிகிச்சை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேசுக்கு மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 446-ஆக உயர்ந்துள்ளது.
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா காலகட்டத்தில் மட்டும் 1,602 பேருக்கு ‘ஆஞ்சியோகிராம்’ மற்றும் ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சைகள் செய்யப்பட்டு, தொடர்ந்து 4-வது ஆண்டாக தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது.