திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் ஆகிய 4 மண்டலங்களில் குப்பைகள் சேகரிப்பது, மக்கும் குப்பைகளை தரம் பிரிப்பது போன்ற பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர்,

புதிதாக ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் ஏற்கனவே வேலை செய்த தூய்மை பணியாளர்களை முழுமையாக எடுக்காமல் ஒரு சிலரை மட்டும் எடுத்துவிட்டு அவர்களுக்கு பதிலாக புதிய பணியாளர்களை நியமனம் செய்து உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பழைய தூய்மை பணியாளர்கள், தங்களை மீண்டும் பணியமர்த்த கோரி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி மற்றும் மண்டல அதிகாரிகள், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் பேசியதை தொடர்ந்து சாலைமறியலை கைவிட்ட தூய்மை பணியாளர்கள், மண்டல அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story