மாவட்ட செய்திகள்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது + "||" + Thiruvorthyur Vadivudayamman temple election will be held tomorrow

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவொற்றியூர், 

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் உற்சவர் சந்திரசேகரர் சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதியில் உலா வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக உற்சவர் சந்திரசேகரர் மனோன்மணி தாயாருடன், அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க, மாடவீதிகளில் தேர் உலா வருகிறது.

தேரோட்டத்துக்கு வசதியாக சாலை சீரமைப்பு, மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. வருகிற 27-ந் தேதி கொடியிறக்கம், 28-ந் தேதி பந்தம் பறிஉற்சவம், 18 திருநடனத்துடன் விழா நிறைவுபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.
2. கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் தாக்கப்பட்ட வாலிபர் சாவு அன்னவாசலில் போலீசார் குவிப்பு
கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்ட வாலிபர் பரிதாபமாக இறந்தார். அன்னவாசலில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
4. முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
5. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை ₹1,600 கோடி நன்கொடை வசூல்
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை ₹1,600 கோடி நன்கொடையாக வசூலிக்கப்பட்டதாக ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் கூறினர்.