இரிடியம் கலந்த கோபுர கலசம் விற்ற மோசடி வழக்கில் 2 பேர் கைது


இரிடியம் கலந்த கோபுர கலசம் விற்ற மோசடி வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2021 4:05 PM IST (Updated: 24 Feb 2021 4:05 PM IST)
t-max-icont-min-icon

இரிடியம் கலந்த கோபுர கலசம் விற்ற மோசடி வழக்கில் 2 பேர் கைது.

பூந்தமல்லி,

விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், வேலாயுதம் காலனியைச் சேர்ந்தவர் நியூட்டன் (வயது 44). போட்டோ கிராபராக இருந்த இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இவர் தனது நண்பர் ஆடிட்டர் ரகுஜியுடன் கடந்த 19-ந் தேதி கடத்தப்பட்டார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில், கோவில் கோபுர கலசத்தில் இரிடியம் கலந்து இருப்பதாகவும், அதனை வாங்குபவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகலாம் என கூறி பல பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு கோபுர கலசத்தை போலியாக விற்றது தெரியவந்தது.

இதனால் பணத்தை பறிகொடுத்தவர்கள் மோசடியில் ஈடுபட்ட இருவரையும் கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இருவரையும் மீட்டு, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சுனில், திலீப், சதீஷ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் நியூட்டன் மற்றும் ரகுஜி ஆகிய 2 பேர் மீதும் மோசடி பிரிவின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து போலியான இரிடியம் கலந்த கலசத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story