மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
காஞ்சீபுரம்,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமாக அதிகரித்து வழங்க வேண்டும். காஞ்சீபுரத்தில் உள்ள 9 மாவட்டத்திற்கான ஒருங்கிணைந்த காதுகேளாதோர் உயர்நிலை பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், தனியார் துறையிலும் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016-ன் படி 5 சதவீத வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல் கடந்த 9-ந்தேதி இவர்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story