விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 26 Feb 2021 2:45 AM IST (Updated: 26 Feb 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே அணிக்குறிச்சி மேல தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 24). விவசாயியான இவர் பல மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனிமையில் இருந்த விஜய், வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதைக்கண்ட உறவினர்கள் விஜயை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜய், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில், விஜயின் தாய் செல்வி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story