100 மீட்டர் தூரத்தை 47 வினாடிகளில் ஓடி உலக சாதனை: 3 வயது சிறுவனை பாராட்டிய மாவட்ட கலெக்டர்
100 மீட்டர் தூரத்தை 47 வினாடிகளில் ஓடி உலக சாதனை: 3 வயது சிறுவனை பாராட்டிய மாவட்ட கலெக்டர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் வசிக்கும் அப்துல் பாரி என்ற 3 வயதுடைய சிறுவன் 100 மீட்டர் ஓட்டத்தை 47 வினாடிகளில் ஓடி சாதனை படைத்து கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.இதனையடுத்து நேற்று முன்தினம் சிறுவன் அப்துல் பாரி தனது பெற்றோருடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிசை நேரில் சென்று சந்தித்து சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் கோப்பை ஆகியவற்றை காண்பித்தார். அப்போது கலெக்டர் சாதனை படைத்த சிறுவனை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.
Related Tags :
Next Story