இளம்பெண் கொலை வழக்கில் உறவினர் கைது


இளம்பெண் கொலை வழக்கில் உறவினர் கைது
x
தினத்தந்தி 1 March 2021 12:40 AM IST (Updated: 1 March 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்காடு அருகே இளம்பெண் கொலை வழக்கில் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். நீண்டநேரம் செல்போனில் பேசியதால் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளி்த்து உள்ளார்.

திருவெண்காடு:
திருவெண்காடு அருகே இளம்பெண் கொலை வழக்கில் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். நீண்டநேரம் செல்போனில் பேசியதால் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளி்த்து உள்ளார். 
இளம் பெண் கொலை
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ள பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருைடய  மகள் கலையழகி(வயது26). கடந்த 25-ந் தேதி இவர் வீட்டில் தனியாக இருந்த போது கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் போலீசாரின் சந்தேகப்பார்வை அதே பகுதியை சேர்ந்த கலையழகியின் பெரியப்பா மகன் ரகு(30) மீது திரும்பியது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கலையழகியை, ரகு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 
கைது
இதைத்தொடர்ந்து ரகுவை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து ரகு போலீசாரிடம் கூறியதாவது:- 
 கலையழகி, அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசி வந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. அவருக்கு நான் அறிவுரை வழங்கியும் கேட்கவில்லை.
 சம்பவத்தன்று கலையழகி நீண்ட நேரம் செல்போனில்  பேசிக் கொண்டிருந்தார். இதை நான்(ரகு) கண்டித்தேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் என்னை திடீரென கலையழகி தாக்க முயன்றார். 
அப்போது ஆத்திரமடைந்த நான் கலையழகியை கீழே தள்ளி விட்டேன். மேலும் அவரது கழுத்தை செல்போன் சார்ஜர் வயரால் இறுக்கினேன். இதனால் அவரது உயிர் பிரிந்து விட்டது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நான் வெளியே சென்று விட்டேன். இவ்வாறு ரகு போலீசாரிடம் கூறினார். கைது செய்யப்பட்ட ரகுவை போலீசார் சீர்காழி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story