பாளையங்கோட்டையில் குரங்குகள் தொல்லை


பாளையங்கோட்டையில் குரங்குகள் தொல்லை
x
தினத்தந்தி 28 Feb 2021 8:25 PM GMT (Updated: 28 Feb 2021 8:25 PM GMT)

பாளையங்கோட்டையில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது.

நெல்லை, மார்ச்:
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. 2 குரங்கள் 3 குட்டிகளுடன் அப்பகுதியில் சுற்றி வருகிறது. வீடுகள் மற்றும் காம்பவுண்டு சுவர்களில் ஏறிச் செல்லும் இவைகள் அந்த வழியாக செல்லும் குழந்தைகள், பெண்கள், முதியோர்களை அச்சுறுத்துகிறது.

கடைகளில் இருந்து பழங்கள், தின்பண்டங்களை வாங்கி செல்கிறவர்களிடம் இருந்து அவற்றை பறிக்கின்றன. தென்னை மரங்களில் உள்ள தேங்காய்களை பறித்தும் வீசுகின்றன. வீடுகள், கடைகளில் புகுந்தும் பொருட்களை பறித்துச் செல்கின்றன. எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story