இசை வேளாளர்கள் சங்க எழுச்சி விழா
திருச்சியில் இசை வேளாளர்கள் சங்க எழுச்சி விழா நடைபெற்றது
திருச்சி,
தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை மற்றும் அனைத்து இசை வேளாளர்கள் சங்கம் சார்பில் இசை வம்சத்தின் எழுச்சி விழா என்ற நிகழ்ச்சி நேற்று திருச்சியில் நடந்தது. சங்கத்தின் நிறுவனத் தலைவர் குகேஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜேஸ்வரன் அதிபன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மங்கல இசை கலைஞர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து இருப்பது போல் தமிழகத்திலும் அறநிலைய துறை சார்பில் இயங்கும் கோவில்களில் பணிபுரியும் மங்கல இசைக்கலைஞர்களை அரசு ஊழியராக வேண்டும்,
இசைக்கலைஞர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., டாக்டர் ஜெயமூர்த்தி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
Related Tags :
Next Story