ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 28 Feb 2021 9:53 PM GMT (Updated: 28 Feb 2021 9:53 PM GMT)

ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஜீயபுரம், 
ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆய்வு செய்தார். அப்போது, குற்ற பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையத்திலும், ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் ஆய்வு செய்தார். முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். இந்த ஆய்வின் போது, துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story