ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2020-21-ம் ஆண்டின் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரத்தில் இருந்து நிதி உதவி ரூ.37 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் அனைத்து கிறிஸ்தவ பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் (இதில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள்) புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த புனித பயணம் இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயாசமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. www.bcmbcmw, tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கலாம்
எனவே புனித பயணம் செல்ல விருப்பமுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவி கோரும் விண்ணப்பம் 2020-21 என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நேரில் வர வேண்டியதில்லை.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சிறுபான்மையினர் நல இயக்குனரகத்தை 044-28520033 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story