மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்று உயர் பதவிகளுக்கு போனவர்கள் எந்தெந்த சாதிகளை சேர்ந்தவர்கள்? சைதை துரைசாமி பட்டியல் வெளியீடு
மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்று உயர் பதவிகளுக்கு போனவர்கள் எந்தெந்த சாதிகளை சேர்ந்தவர்கள்? என்பது தொடர்பான பட்டியலை சைதை துரைசாமி வெளியிட்டுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
லட்சிய பயணம்
மனிதநேய இலவச அறக்கட்டளையானது யு.பி.எஸ்.சி. மற்றும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் மட்டும் 3,505 மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளின் உயர் பதவிகளுக்கு தேர்வாகியிருக்கிறார்கள். இது தவிர மத்திய, மாநில அரசுகளின் தனித்தனி பிரிவுகளில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு அரசு பணியில் சேர்வதற்கு, மனிதநேயம் வழிகாட்டியுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 259 சாதிகளில், மனிதநேயத்தின் பயிற்சியின் மூலம் 169 சாதிகளை சேர்ந்த 3,505 மாணவர்கள் அரசு உயர் பதவிகளில் சேர்ந்துள்ளனர். ஒட்டு மொத்த 259 சாதி மாணவர்களையும் அரசு உயர் பதவியில் அமர்த்துவது தான் மனிதநேயத்தின் லட்சியம். நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கேற்ப அனைத்து சாதியினருக்கும் சமநீதி கிடைக்கும் வகையில் எங்கள் லட்சியப்பயணம் தொடர்கிறது.
சாதிவாரியாக பட்டியல்
அந்தவகையில், மனிதநேய அறக்கட்டளை மூலம் பயிற்சி பெற்று மத்திய, மாநில அரசுகளின் உயர் பதவியில் இருப்பவர்கள் பட்டியலை சாதிவாரியாக தருகிறோம். இதுவரை மத்திய, மாநில அரசுகளில் உயர் பதவி வகிக்கும் 169 சாதியினரில் பொது பட்டியல் சாதியினர் 70 பேர். அதில், அய்யர்-41, நாயர்-16, விஸ்வ பிராமணர்-6, அய்யங்கார்-5, மலைகநாடு பிராமணர்-2 என மொத்தம் 70.
பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர் மொத்தம் 96. அதில் லப்பை-90, ராவுத்தர்-3, மரக்காயர்-1, ஷேக்-1, மாப்பிலா-1 என மொத்தம் 96. கிறிஸ்தவர்கள் 249 பேர். இதில், கிறிஸ்தவ நாடார்-198, கிறிஸ்டியன் பரதர்-24, கிறிஸ்தவ கவரா-13, கிராமணி-8, சாணார்-6 என மொத்தம் 249.
பிற்படுத்தப்பட்டோர்
பிற்படுத்தப்பட்டோர் 1,476 பேர். இதில் கொங்கு வெள்ளாள கவுண்டர்-186, வடுகன்-118, செங்குந்தர்-102, யாதவா-104, இந்து நாடார்-115, துளுவ வெள்ளாளர்-63, சோழிய வெள்ளாளர்-55, நத்தமர்-40, கம்மாளர்-34, வீரகுடி வெள்ளாளர்-32, வாணிய செட்டியார்-23, கன்னடிய நாயுடு-20, குலாலர்-18, கஞ்ஞம்ரெட்டி-19, தெலுங்கு பட்டி செட்டி-17, மருத்துவர், முத்துராஜா, தொளுவநாயக்கர், ரெட்டி ஆகியவை தலா 16, நாயக்கர், சாது செட்டியார், தேவாங்கர் ஆகியவை தலா 13, சாலியர், பரவக்குலம், ஒக்காலிக்க கவுடர், சவுராஷ்டிரா ஆகியவை தலா 12.சேனைத்தலைவர், இசைவேளாளர் தலா 11, நாவிதர், பரவர், வண்ணார் ஆகியவை தலா 10, மலையமார், சோழிய செட்டியார், விஸ்வகர்மா, அம்பலகார், ஆண்டி பண்டாரம் தலா 9, பொட்டு சாலையர், வெத்தலகாரநாயக்கர், நாயுடு வடுகர், வடுகன் ரெட்டியார், ஆழ்வார், பிள்ளைமார், படாங்கா, கொல்லா, போயர், ஜங்கம் ஆகியவை தலா 8.
பண்ணையார்
மூப்பன், உப்பாரா, நாட்டு கவுண்டர் ஆகியவை தலா 7, குடிகார வெள்ளாளர், வேலன் செட்டியார், கவுத்தியர், சேர்வை, வேலர், பர்வத ராஜகுல, பட்டனவர் ஆகியவை தலா 6. பத்மசாலின், கற்பூர செட்டியார், மணியகார், சாம்பவர், ஒட்டர், பண்ணையார், உப்பு குறவர் ஆகியவை தலா 5.கம்பர், லிங்காயத், புலவர், ராஜகம்பளம், வள்ளலார், இடிகா, ஏர்குலா, சவலக்கார், வீரசைவர், பாண்டில், குயவர், ராஜகம்பலத்தநாயக்கர், தொண்டமன், மடிகா ஆகியவை தலா 4, யோக்கீஸ்வர், தசரி, நான்குடி வெள்ளாளர், கிருஷ்ணன்வாகா, மலையர், நகரம், என்னாடி, மகார் ஆகியவை தலா 3, நத்தமன் உடையார், அயிரா வைஷ்யர், பாணர், சகரா, தோரையர், லம்பாடி, கபேரா, நுழையார், சதாத
வைஷ்ணவர், முத்துராயர்நாயுடு, பரவர் ஆகியவை தலா 2, வலம்பார், வால்மீகி ஆகியவை தலா 1 என மொத்தம் 1,476 பேர்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 541. இதில் வன்னியர்-447, வேட்டுவ கவுண்டர்-55, குரும்ப கவுண்டர்-21, ஊராளி கவுண்டர்-11, வேட்டைக்காரர்-5, ஒப்பாலி கவுண்டர்-2 என மொத்தம் 541. முக்குலத்தோர் 451 பேர். இதில் அகமுடையார்-148, மறவர்-149, கள்ளர்-103, பிரமலைக்கள்ளர்-51 என மொத்தம் 451 பேர்.
ஆதி திராவிடர் 593 பேர். இதில் ஆதி திராவிடர் 283, பள்ளர்-194, அருந்ததியர்-79, சக்கிலியர்-9, தேவேந்திர குலத்தான்-6, சம்பன், வாத்திரியர் தலா 4, நாவிதர், மதிரா தலா 3, கோசாங்கி, மலா, பலிஜா, வண்ணான் ஆகியவை தலா 2 என மொத்தம் 593. பழங்குடியினர் 29 பேர். அதில் மலையாளி-15, குரமன்-5, இருளர், கொண்டாரெட்டி, குரும்பா ஆகியவை தலா 2. உரளி, மலை பண்டாரம், கன்னிகர் ஆகியவை தலா 1 என 29 பேர்.
மகிழ்ச்சி
பொது, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முக்குலத்தோர், ஆதி திராவிடர், பழங்குடியினர் என மொத்தம் 3,505 பேர். 169 சாதிகளில் இருந்து மனிதநேயத்தில் பயிற்சி பெற்று மத்திய, மாநில அரசுகளின் உயர் பணிகளில் சேர்ந்திருப்பது மகிழ்வளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story