வெறிநாய்கள் கடித்து சிறுமி காயம்


வெறிநாய்கள் கடித்து சிறுமி காயம்
x
தினத்தந்தி 1 March 2021 6:34 PM GMT (Updated: 1 March 2021 6:34 PM GMT)

வெறிநாய்கள் கடித்து சிறுமி காயம் அடைந்தார்.

கரூர்
கரூர் சின்னஆண்டாங்கோவில் எல்.ஆர்.ஜி.நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகள் சுவிஸ்ஷா (வயது 6). இவள் நேற்று மதியம் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது தெருவில் சுற்றி திரிந்து வெறிநாய்கள் சேர்ந்து சுவிஸ்ஷாவை கடித்துள்ளது. இதனால் நெற்றி உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்து அலறி துடித்த அவளை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story