வாய்க்காலில் மூழ்கி குழந்தை பலி
வாய்க்காலில் மூழ்கி குழந்தை இறந்தது.
லாலாபேட்டை
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள கள்ளப்பள்ளியை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி கண்ணகி. இந்த தம்பதியின் மகன் வசந்த் (வயது 2). இந்தநிலையில், நேற்று காலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த வசந்த் திடீரென காணவில்லை. இதையடுத்து வசந்த்தை அவனது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது வசந்த் வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தான். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக வசந்தை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வசந்த்தை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story