46 ரேஷன்அரிசி மூடைகளுடன் சரக்கு வாகனம் பறிமுதல்


46 ரேஷன்அரிசி மூடைகளுடன் சரக்கு வாகனம் பறிமுதல்
x
தினத்தந்தி 1 March 2021 7:15 PM GMT (Updated: 1 March 2021 7:15 PM GMT)

மானாமதுரையில் நள்ளிரவில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 46 ரேஷன்அரிசி மூடைகளுடன் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மானாமதுரை,

மானாமதுரையில் நள்ளிரவில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 46 ரேஷன்அரிசி மூடைகளுடன் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நன்னடத்தை விதிமுறைகளும் உடனே அமலுக்கு வந்தன.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க அந்தந்த சட்டமன்ற தொகுதியில் பறக்கும்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

46 ரேஷன் அரிசி மூடைகளுடன்...

அப்போது நள்ளிரவில் இளையான்குடியில் இருந்து மானாமதுரை நோக்கி ஒரு சரக்கு வாகனம் வந்தது.
அந்த வாகனத்தை தேர்தல் பிரிவு அதிகாரி மாணிக்கவாசகம் தலைமையிலான அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் சரக்கு வாகனத்தில் இருப்பது அனைத்தும் நெல்மூடைகள் என டிரைவர் தெரிவித்தார்.
இதையடுத்து சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டு இருந்த மூடையை பிரித்து பார்த்த போது அவை அனைத்தும் ரேஷன்அரிசிகள் என தெரிய வந்தது.
மொத்தம் 46 ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. இதை தொடர்ந்து ரேஷன் அரிசி மூடைகளுடன் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த தேர்தல் பிரிவு அதிகாரிகள் மானாமதுைர போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story