தேர்தல் தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்


தேர்தல் தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 March 2021 7:56 PM GMT (Updated: 1 March 2021 7:56 PM GMT)

தேர்தல் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் சப்-கலெக்டர் தினேஷ்குமார் வலியுறுத்தினார்.

சிவகாசி, 
தேர்தல் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் சப்-கலெக்டர் தினேஷ்குமார் வலியுறுத்தினார். 
கலந்தாய்வு கூட்டம் 
சிவகாசி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலை அமைதியாக நடத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. 
சிவகாசி சப்-கலெக்டரும், சிவகாசி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான தினேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
சிவகாசி சட்டமன்ற தொகுதி தேர்தல் அமைதியாக நடந்த வேண்டும். குறிப்பாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதவாறு தீவிர கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.

விதிமுறைகள் 
அரசியல் கட்சிகள் பிரசாரத்துக்கு அனுமதி கேட்கும் போது தேர்தல் ஆணையம் விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். 
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் இருந்து புகார்கள் வந்தால் அந்த புகார்கள் மீது கால தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை 100 சதவீதம் தடுக்க வேண்டும். இதில் எவ்வித பாரபட்சமும் இருக்க கூடாது. 
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சிவகாசி தாசில்தாரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமசுப்பிரமணியம், சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள் கலந்து கொண்டனர்.

Next Story