மணல் அள்ளும் எந்திர உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சித்தஞ்சேரியில் மணல் அள்ளும் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை,
பொக்லைன் எந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1000 கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23-ந் தேதி முதல் தமிழ்நாடு மண் அள்ளும் எந்திர உரிமையாளர்கள் நல சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஊத்துக்கோட்டை அருகே உள்ள சித்தஞ்சேரியில் மணல் அள்ளும் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாநில தலைவர் விவேக் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஊத்துக்கோட்டை பரந்தாமன் வரவேற்றார். அதே போல் திருவள்ளூரை அடுத்த சுங்கச்சாவடி பகுதியில் நேற்று தமிழ்நாடு மண் அள்ளும் எந்திர உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தமிழ்நாடு மண் அள்ளும் எந்திர உரிமையாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் தீனதயாளன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் பாலாஜி, மாவட்ட துணை தலைவர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மண் அள்ளும் எந்திர உரிமையாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் கத்திபாரா விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story