எல்லை பாதுகாப்பு படை வீரர் வீட்டில் கொள்ளை


எல்லை பாதுகாப்பு படை வீரர் வீட்டில் கொள்ளை
x

திங்கள்சந்தை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரர் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரர் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
 எல்லை பாதுகாப்பு படை வீரர்
இரணியல் அருகே வில்லுக்குறி பண்டாரவிளையை சேர்ந்தவர் வில்சன் ஆரோக்கியதாஸ் (வயது 31). இவர், மேற்கு வங்க மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அனிஷா பெலிக்சி (26) என்ற மனைவி உள்ளார். அனிஷாபெலிக்சி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்.
அனிஷாபெலிக்சி கோணங்காட்டில் உள்ள தாய் வீட்டுக்கு செல்லும் போது வீட்டை பூட்டி அப்பகுதியில் உள்ள தனது மாமியாரிடம் சாவியை கொடுத்துச் செல்வது வழக்கம். சம்பவத்தன்றும் அனிஷாபெலிக்சி வீட்ைட பூட்டி விட்டு சாவியை மாமியாரிடம் கொடுத்து விட்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
கொள்ளை
நேற்று முன்தினம் காலை அனிஷா பெலிக்சியின் மாமியார், மின் விளக்கை அணைக்க சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம் மாயமாகி இருந்தது.
மேலும், டிவி, மிக்ஸி, அயன்பாக்ஸ் உள்பட ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அனிஷா பெலிக்சி இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story