கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 March 2021 12:05 AM IST (Updated: 3 March 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

கமுதி
கமுதி-கோட்டைமேட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவுக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி மாணவ-மாணவியர்கள் நேற்று, தமிழகத்தில் ஒரு பிரிவினருக்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை கண்டித்தும், மேலும் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரியும் 500-க்கும் மேற்பட்டோர் கல்லூரியை புறக்கணித்து விட்டு சாலை மறியல் செய்தனர். 
இதனால் கமுதி-முதுகுளத்தூர் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது. மறியல் போராட்டம் நடத்திய மாணவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story