விளையாட்டு விழா

விளையாட்டு விழா
விருதுநகர்,
விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் 63-வது விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாக குழு செயலாளர் நாராயண மூர்த்தி வரவேற்றார். முன்னாள் செயலாளர் ராஜவேல் முன்னிலை வகித்தார். விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி பலசரக்குக்கடை மகமை உறுப்பினர் வெங்கடேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாக குழு தலைவர் ஜெகதீசன், துணை தலைவர் சந்திரபோஸ், பொருளாளர் கண்ணன், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், முதல்வர், துணை முதல்வர், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். முடிவில் கல்லூரி முதல்வர் ஜவகர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story