பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து


பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 3 March 2021 2:16 AM IST (Updated: 3 March 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

துவரங்குறிச்சி,
மதுரையிலிருந்து கரூர் மாவட்டம் தோைகமலை நோக்கி நேற்று ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த கார் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த கல்லுப்பட்டி அருகே வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கார், சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் காரில் சிக்கி இருந்த 5 பேரை மீட்டனர். 5 பேரும் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story