சாலையில் கவிழ்ந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்
சாலையில் கவிழ்ந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.
பூந்தமல்லி,
தாம்பரத்தில் இருந்து ஜல்லியை ஏற்றிக்கொண்டு பூந்தமல்லி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்ட சாலை, மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு சாலையின் நடுவே உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். வாகனங்களை நிறுத்திவிட்டு இறங்கி சென்று பார்த்தபோது டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் 3 ராட்சத கிரேன் மற்றும் பொக்லைன் எந்திரம் உதவியோடு கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story