வேலூர் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 24,483 பேர் தபால் வாக்களிக்க நடவடிக்கை


வேலூர் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 24,483 பேர் தபால் வாக்களிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 3 March 2021 5:01 PM GMT (Updated: 3 March 2021 5:01 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 24,483 பேர் தபால் வாக்களிக்க நடவடிக்கை

வேலூர்

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தியது. அதில் முக்கியமானது, 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்குகளை அளிக்கலாம் என்பதாகும். அதன்படி 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு செலுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்டோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட 24 ஆயிரத்து 483 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களின் முகவரிக்கு தேர்தல் அலுவலர்கள் சென்று அவர்களின் வாக்குப்பதிவை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

அதன்படி அலுவலர்கள், அவர்களிடம் தபால் வாக்குகளுக்கான படிவத்தை (12 டி) ஓரிரு நாட்களில் வழங்க உள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

Next Story