கொரோனா தடுப்பூசி முன்பதிவிற்கு அடையாள அட்டை அவசியம். கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்.


கொரோனா தடுப்பூசி முன்பதிவிற்கு அடையாள அட்டை அவசியம். கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்.
x
தினத்தந்தி 3 March 2021 6:01 PM GMT (Updated: 3 March 2021 6:01 PM GMT)

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவிற்கு அடையாள அட்டை அவசியம். கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்.

திருவண்ணாமலை

கொரோனா தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஒரு மாத இடைவெளியில் இரு தவணைகளாக அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது. 

கொேரானா தடுப்பூசி பெறுவதற்காக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் http://selfregistration.sit.co-vin.in என்ற இணையதளத்திலும் மற்றும் ஆரோக்கிய சேது 2.0 எனும் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். 

அடையாள அட்டை

முன்பதிவிற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஓய்வூதிய பாஸ் புத்தகம், என்.பி.ஆர். ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட் போன்ற ஒரு அடையாள அட்டை அவசியமாகும். 
மேற்கண்ட முன்பதிவு செய்யும் போது கைபேசி எண் தெரிவித்து அதன்படி வரப்பெறும் 6 இலக்க குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்து மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒன்றின் விவரம், பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றினை பதிவேற்றம் செய்ய வேண்டும். 
அதன் பின்னர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான தேதி, இடம் மற்றும் நேரம் ஆகியவற்றினை செயலி வழியாக குறுந்தகவல் அனுப்பப்படும். 
இணையதளம் வாயிலாக...
பதிவு செய்யப்பட்டவர்களில் முன்னுரிமை அடிப்படையில் கொேரானா தடுப்பூசி செலுத்தப்படும். ஒரு கைபேசி எண் மூலமாக 4 பேருக்கு முன்பதிவு செய்ய இயலும்.
இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய இயலாதவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அங்குள்ள சுகாதார பணியாளர்கள் மூலமாக பதிவு செய்து கொேரானா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 
கொரோனா தடுப்பூசி செலுத்த வரும்போது முன்பதிவில் அளிக்கப்பட்ட விவரத்தின் அடையாள அட்டையின் அசலுடன் வரவேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், செங்கம், போளூர், ஆரணி, வந்தவாசி ஆகிய அரசு மருத்துவமனைகள், செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அத்தியந்தல் ரமண மகரிஷி ரங்கம்மாள் மருத்துவமனை, கிரேஸ் மருத்துவமனை, ராஜ் மருத்துவமனை, சேத்துபட்டு புனித தாமஸ் மருத்துவமனை ஆகிய தனியார் மருத்துவமனைகளிலும் கொரானோ தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ஒரு தவணைக்கு ரூ.250 கட்டணம் செலுத்தியும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். 
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Next Story