நொய்யல் பகுதியில் சுகாதார பணி


நொய்யல் பகுதியில் சுகாதார பணி
x
தினத்தந்தி 3 March 2021 7:15 PM GMT (Updated: 3 March 2021 7:15 PM GMT)

நொய்யல் பகுதியில் சுகாதார பணி நடந்தது.

நொய்யல்
நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகளில்சுகாதாரத் துறையினர் குடிநீர் தொட்டிகளில் உள்ள தண்ணீரில் குளோரின் பவுடர் கலக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுகாதார ஆய்வாளர்கள் மயில்வாகனன், கார்த்திக், மேற்பார்வையாளர் வீரமணி மற்றும் சுகாதார பணியாளர்கள் கொண்ட குழுவினர் நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் உள்ள தண்ணீரில் குளோரின் பவுடர் கலந்து வருகின்றனர். குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரில் மாசு ஏற்பட்டு அதிலிருந்து பல்வேறு நோய்கள் பரவாமல் இருக்க நோய்களை தடுப்பதற்காக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story