பெரியவடுகப்பட்டியில் மருத்துவ முகாம்


பெரியவடுகப்பட்டியில் மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 4 March 2021 12:46 AM IST (Updated: 4 March 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

பெரியவடுகப்பட்டியில் மருத்துவ முகாம் நடந்தது.

நொய்யல்
கரூர் மாவட்டம் பெரிய வடுகப்பட்டியில் கொரோனா வைரஸ் குறித்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர் சத்தியேந்திரன் தலைமையில் செவிலியர்கள் செல்வராணி, கன்னியம்மாள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், லேப் டெக்னீசியன் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு ரத்த மாதிரி எடுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு குறித்து பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினர். இதில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story