கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.


கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை  அமைக்கப்பட்டுள்ளது.
x
தினத்தந்தி 4 March 2021 1:29 AM IST (Updated: 4 March 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

திருப்பூர்,:-
வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று திறந்துவைத்தார். கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலை பேசி எண் 1800-425-6989-ல் தொடர்புகொண்டு புகார்கள் மற்றும் கருத்துகளை தெரிவிக்கலாம். இந்த புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், நிலை கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, நேரடி விசாரணைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும்,  ஒரு தொகுதிக்கு 3 பறக்கும்படை வீதம் மொத்தம் 24 பறக்கும் படைகளும், 24 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு, 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-ஐயும் வாக்காளர்கள் பயன்படுத்தி தேர்தல் தொடர்பான சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் ஹமீது, தேர்தல் தாசில்தார் முருகதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story