கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வேட்புமனு படிவங்களை தொகுதிகளுக்கு அனுப்ப ஏற்பாடு


கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வேட்புமனு படிவங்களை தொகுதிகளுக்கு அனுப்ப ஏற்பாடு
x
தினத்தந்தி 3 March 2021 8:18 PM GMT (Updated: 3 March 2021 8:18 PM GMT)

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வேட்புமனு படிவங்களை தொகுதிகளுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

நெல்லை, மார்ச்:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது அதற்கான வேட்புமனுத்தாக்கல் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான வேட்புமனு படிவங்கள் தமிழகத்தில் உள்ள அரசு அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, ராதாபுரம், நாங்குநேரி ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு படிவங்கள் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. வாகனங்கள் மூலம் இந்த விண்ணப்ப படிவங்கள் கொண்டு வரப்பட்டன. சென்னை, திருச்சி, விருத்தாசலம் ஆகிய அரசு அச்சகங்களில் இருந்து இவை ெகாண்டு வரப்பட்டது. அவற்றை தேர்தல் அலுவலர்கள் தொகுதி வாரியாக பிரித்து அனுப்ப ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Next Story