சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை -நிலை கண்காணிப்பு குழுக்கள் நியமனம்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளது.
பறக்கும் படை
ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் பறக்கும்படை குழுக்கள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அதன்படி ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் நிலை கண்காணிப்பு குழுவில் முரளிதரன், மாதவன், குருசாமி ஆகியோரும், இவர்களை 9791733350 என்ற செல்போன் எண்ணிலும், பறக்கும் படை குழுவில் குழந்தைவேல், சந்திரசேகர், பாரதி ஆகியோரும், இவர்களை 9791733389 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் புகார் தெரிவிக் கலாம். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நிலை கண்காணிப்பு குழுவில் செந்தில்குமார், சசிகலா, பச்சையப்பன் ஆகியோரும், இவர்களை 9791733356 என்ற செல்போன் எண்ணிலும், பறக்கும் படை குழுவில் சையத் முஸ்தபா, பழனிசாமி, அருள்மொழிவர்மன் ஆகியோரை 9791733364 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
கண்காணிப்பு குழு
பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை குழுவில் மகாலிங்கம், பத்மநாதன், செந்தில் ஆகியோரும், இவர்களை 9791722250 என்ற எண்ணிலும், நிலை கண்காணிப்பு குழுவில் ராஜேந்திரன், ஹரிபிரசாத், வெங்கடாசலம் ஆகியோரும் இவர்களை 9791766675 என்ற எண்ணிலும், கோபி சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை குழுவில் முரளி, சரவணன், சந்திரசேகர் ஆகியோரும், இவர்களை 9791744496 என்ற எண்ணிலும், நிலை கண்காணிப்பு குழுவில் அன்பழகன், சுப்பிரமணியம், சிவபிரகாசம் ஆகியோரும் இவர்களை 9791755508 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் நிலை கண்காணிப்பு குழுவில் மரியதாஸ், செல்வம், பழனிசாமி ஆகியோரை 9791744492 என்ற எண்ணிலும், பறக்கும் படை குழுவில் கார்த்திகேயன், சுப்பிரமணி, முருகன் ஆகியோரை 9791722245 என்ற எண்ணிலும், பவானி சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை குழுவில் குமாரசாமி, கார்த்திக்குமார், ரவி ஆகியோரை 9791711137 என்ற எண்ணிலும், நிலை கண்காணிப்பு குழுவில் அப்புசாமி, மனோகரன், நாசர்அலி ஆகியோரை 9791751110 என்ற எண்ணிலும், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் நிலை கண்காணிப்பு குழுவில் ஷியாம்சுந்தர், ஜெயசந்திரன், சிவஞானம் ஆகியோரை 9791744429 என்ற எண்ணிலும், பறக்கும் படை குழுவில் பாலாஜி, வேலுசாமி, மோகனசுந்தரம் ஆகியோரை 9791711165 என்ற எண்ணிலும், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை குழுவில் ஆசைத்தம்பி, யுவாசெந்தில், பார்த்திபன் ஆகியோரை 9791711160 என்ற எண்ணிலும், நிலை கண்காணிப்பு குழுவில் மூர்த்தி, ராஜாமணி, செல்வராஜ் ஆகியோரை 9791744475 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story